search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி திருப்பூர் பொதுமக்களிடம் ரூ.5கோடி மோசடி- போலீஸ் கமிஷனரிடம் புகார்
    X
    மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி திருப்பூர் பொதுமக்களிடம் ரூ.5கோடி மோசடி- போலீஸ் கமிஷனரிடம் புகார்

    • ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன் ராம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களை அணுகினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.

    இதனை நம்பி மேற்கண்ட 2 பேரிடம் நாங்கள் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 350 பேர் வரை ரூ.5 கோடி வரை பணம் கொடுத்துள்ளோம். ஆனால் பணத்தை தராமல் அவர்களது குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். பணத்தை கேட்டால் எந்த பதிலும் கூறாமல் ஏமாற்றி வருகின்றனர். சுமார் ரூ. 5 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தவர்களிடம் இருந்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×