என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லா
- ஒன்றிய அரசு ஒருவேளை உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு.
- கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாணவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்திலிருந்து வழங்கி வந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை திடீரென்று இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது.
இந்நிலையில் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துவிட்ட உதவித் தொகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.