என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
- இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக் கூடும்.
- இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னை:
தென்னிந்திய பகுதி களின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் இன்று வீசக் கூடும். நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமும் ஏற்படும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.