search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
    • பணிகளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மானா மது ரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலை, தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சிமிண்ட்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகிறது.

    இதில் சிவகங்கை ரோட் டில் இருந்து அண்ணாமலை நகருக்கு எளிதாக செல்லும் வகையில் சுப்பன் கால்வாய் அருகில் நடைபெறும் புதிய சிமெண்ட் சாலை பணி களை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிக ளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.

    இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த காரர்களை தலைவர் மாரி யப்பன் கென்னடி அறிவுறுத் தினார். இந்த ஆய்வின்போது துணைத் தலைவர் பாலசுந்த ரம், ஆணையாளர் ரெங்க நாயகி, வார்டு உறுப்பினர்கள் இந்துமதி திருமுருகன், கங்கா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • ரூ.80 லட்சம் மதிப்பில் கழிவுகளை அகற்ற நவீன வாகனத்தை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    • ஓட்டுனரிடம் அதற்கான சாவியை வழங்கினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மிகப் பழமையானது. மொத்தம் 27 வார்டுகளை உள்ளடக்கியது. துப்புரவு பணியாளர்கள் திடக்கழிவுகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் பெரிதும் அவதிபட்டனர்.

    இதனை கருத்தில் கொண்டு நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் அன்றாடம் திடக்கழிவுகளை எளிதாக துப்புரவு பணி யாளர்கள் கொண்டு செல்ல 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.80.30 லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் 11 மினி வேன்களை நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் ஆணை யாளர் பார்கவி பொறியாளர் சையது அலி தூய்மை பணியாளர்களிடம் பயன்பாட்டிற்க்கு வழங்கி னார்கள்.

    நகர்மன்ற தலைவர் கொடி அசைத்து மினி வேன்களை தொடங்கி வைத்தார். மேலும் ஓட்டுனரிடம் அதற்கான சாவியை வழங்கினார்.

    ஹைட்ராலிக் மினி வேன்கள் நவீன முறையில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு வார்டுகளுக்கு குப்பைகளை சேகரிக்க செல்லும் பொழுது துப்புரவு பணியாளர்களின் பணி எளிதாகவும் விரை வாகவும் செய்ய ஏதுவாகிறது.

    • வருகிற 10-ந் தேதிக்குள் சிவகங்கை மாவட்டத்தில் 1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்.
    • பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு இந்தியா முழுவதற்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊழலற்ற அரசு என்ற பெயரினை மக்களிடம் பெற்றுள்ளது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு அமைய உள்ளது.

    இத்தகைய நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசின் சாத னைகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் 1000 பா.ஜ.க. கொடிகள் புதிதாக ஏற்றப்படவேண்டும்.கொடிஏற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 1000 பா.ஜ.க. கொடிகள் மாவட்டம் நகரம் ஒன்றிய, பேரூர் பகுதிகளில் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பா.ஜ.கவினர் செய்துவருகிறார்கள்.இதில் பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேஷனல் ஷாப்பிங் மாலில் பரிசுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது.
    • மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை அருகே உள்ள பொன்னமராவதி பஸ் நிலையத்தின் அருகே உள்ள அஞ்சப்பர் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் ஷாப்பிங் மால் பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் பிரபலமான கடையாக உள்ளது.

    இங்கு மளிகை சாமான் கள் முதல் வீட்டில் அன்றாட பயன்பாட்டுக்கு தேவை யான அனைத்து பொருட்க ளும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி வரை ஏராளமான காம்போ ஆபர்கள், பரிசு களுடன் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட் டுள்ளது. இத்துடன் பிளாஸ் டிக் பக்கெட்டு இலவசமாக வழங்கபடுகிறது.

    மேலும் ரூ.1,449-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்குவோருக்கு பிளாஸ் டிக் டப், ரூ.2,999-க்கு மேல் வாங்குவோருக்கு பக்கெட், ரூ.4,999-க்கு மேல் வாங்கு வோருக்கு சேர், குலோப் ஜாமூனுக்கு பாக்கெட்டுக்கு பாக்கெட் இலவசத்துடன் வாளியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆபர்களை பயன்ப டுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, பரிசு களையும் பெற்றுச் சென்று தீபாவளி பண்டி கையை சிறப்பாக கொண்டாடிட பொன்னமராவதி நேஷனல் ஷாப்பிங் மால் நிறுவனத் தார் அழைப்பு விடுத்துள்ள னர். மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

    • சிலம்பம் போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இ.சி.ஏ. அகாடமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவ கங்கை, காளையார் கோ வில், கல்லல், மானா மதுரை, திருப்புவனம், சிங் கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    • திருப்புவனத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சோணை ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கொள்ளை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், அ.தி.மு.க. என்ற பேரியக்கம் யாரையும் நம்பி இல்லை. தொண்டர்களை நம்பி தான் உள்ளது. உங்கள் விருப்பப்படி தான் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து வருகிறார். இன்றைய தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. வெளி மாநில தொழிலா ளர்கள் போலீசாரை தாக்கு கின்றனர். சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கோபி, சிவசிவஸிதர், ஜெகதீஸ்வரன், நகர செயலாளர்கள் நாகரத்தினம், நாகூர்மீரா, கூட்டுறவு சங்க தலைவர் புவனேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைரணி துணை செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் சேதுபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், வழக்கறிஞர் மதிவாணன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செய லாளர், பாலசுப்பிர மணியன் ராமச்சந்திரன், தயாளன், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்க ளுக்கு சேலை வழங்கப் பட்டது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஏராள மான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இளையான்குடி ஒன்றி யத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    இதில் முன்னாள்

    எம்.எல்.ஏ. சுப மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகீம், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் கல்லல் பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க.வின்

    52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கொள்கை பரப்பு துணை செயலா ளரும், முன்னாள் அமைச்ச ருமான மாப.பாண்டிய ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எடப்பாடியார் எண்ணத் திற்கு ஏற்ப எதிர்காலத்தில் வர இருக்கின்ற தேர்தல் மற்றும் கழகத்தினுடைய வளர்ச்சி பணியை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி இதை நாம் செய்துவிட்டால் தி.மு.க. வினர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது பொதுமக்கள் இந்த ஆட்சியை தூக்கிப் போட நினைத்து விட்டார் கள்.

    சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படி யான வாக்கு வித்தியா சத்தில் நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைத்து இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    ஆளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் எங்கே? என்று கேட்டால் நிலம் இருக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார். நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேட்டால் கார் இருக்கிறது என்கிறார். இப் படி வாக்குறுதி கொடுக்கும் போது அனைவருக்கும் தருவேன் என்றவர் இப் போது கொடுக்காமல் இருப்பதற்கான கார ணங்களை தேடி கொண்டி ருக்கிறார்.

    பொது மக்களிடம் எந்த பொய்யை கூறினால் வாக்கு களை பெறலாம் என்பது தி.மு.க.வினர் கை தேர்ந்த வர்கள் என்றும், ஆட்சிக்கு வந்த பின் அதனை நிறை வேற்ற மாட்டார்கள் என்றும், தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன் செந்தில்குமார், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ் செல்வன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மாணவி உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

    அதில் ஒருவரான மேகனா (வயது 13) அதே பகுதியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

    உடனடியாக அவரது பெற்றோர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஓய்வெடுக்க கேட்டுக்கொண்டனர்.

    ஆனாலும் காய்ச்சல் சரியாகவில்லை. தொடர்ந்து அதிகமானதோடு நேற்று இரவு அபாய கட்டத்திற்கு சென்றார். இதனால் பதட்டம் அடைந்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தை பாண்டி மகளை அழைத்துச் சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மேகனா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பிணமாக வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

    முன்னதாக அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகும் முன்பு அவர் பலியாகி விட்டார். இருந்த போதிலும் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதையடுத்து நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்கா ளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வாக்கா ளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. மானா மதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

    இந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவள்ளி, கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள லாம். இந்த சிறப்பு முகாம் களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், https://voters.eci.gov.in இணைய தளம் வழியாகவும் விண்ணப் பிக்கலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள லாம் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போதுஇ தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) மேசியாதாஸ், வட்டாட் சியர்கள் சிவராமன் (சிவ கங்கை), ஆனந்த் (திருப் பத்தூர்), துணை வட்டாட்சி யர் (தேர்தல்) மற்றும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லறைகள், கபர்ஸ்தான் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
    • சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினர் இறந்த உடலை அடக்கம் செய்ய நீண்ட துாரம் எடுத்துச்செல்ல வேண்டி யிருப்பதால் அவர்கள் ஊருக்கு அருகில் கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை நேரடி பேச்சு வார்த்தை மூலம் கைய கப்படுத்த அரசாணைபடி ஒவ்வொரு கலெக்டர் தலைமையில் கொண்ட குழு அமைத்து உத்தர விடப்பட்டுள்ளது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினரின் இறந்த உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் அடக்கஸ்தலங்கள் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை அரசாணையில் தெரிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்வு செய்யும் பொருட்டு கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றிட அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசு ஆட்சே பனை அற்ற அரசு நிலம் ஏதும் உபரியாக இருத்தல் கூடாது. கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளின் தேவையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தலாம்.

    கபஸ்தான் அமைப்பதற்கு உச்சபட்சமாக 1.5 ஏக்கர் வரையிலும் அடக்கஸ்தலம் அமைப்பதற்கும் உச்ச பட்சமாக 2 ஏக்கர் வரைநிலம் கையகப்படுத்த லாம்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டம் உள்ளிட்ட 9 வட்டங்களில் வசித்துவரும் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தினருக்கு தெரியப்படுத்தும் வகையில், தனியார் நிலம் வழங்கும் பட்சத்தில் சிவகங்கை மாவட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×