search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 150 கர்பிணிகளுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கொங்கம்பட்டி ஊராட்சி இடையவலசை கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கியது. இதில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம்மை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.

    பின்னர் இளையான்குடி நகரில் நடை பெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்பிணி பெண் களுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ சுபமதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வட்டார ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளி பேச்சுபோட்டி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட டாக்டர் சேது குமணன். இவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறு வனங்களையும், கல்லூரிகளையும், வோளாண்மை ஆராய்ச்சி மையங்களை நிறுவி ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்பு 8 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடம் நாளடைவில் நிறை நிலை மேல்நிலைப் பள்ளியாக மாறியுள்ளது. இன்று 8 ஆயிரம் மாணவர்களை கொண்ட பெரும் கல்வி குழுமமாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாக பெண்மணி வேலு நாச்சியார் குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுமின் உலக அமைப்பு நிறுவனர் ஜெகத் காஸ்பர் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளி தேர்வுகளை எப்படி கையாளுவது குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
    • முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிட். காரைக்குடி மண்டலம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, விழிப்புணர்வு வாரத் தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழக காரை க்குடி பொது மேலாளர் சிங் காரவேலு ஆகியோர் காரைக்குடியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார மாக கொண்டாடும் வகை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார் பில் தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தகவல் அறி யும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மண்டல தலை மை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் , காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயிற்சி பெறும் பணியாளர் கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி சூடாமணிபுரம் , அழகப்பா பல்கலைக்கழகம், ஆரியபவன் உணவகம் வழியாக காரைக்குடி நக ராட்சி அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் (வணிகம்) நாகராஜன், (தொழில்நுட்ப ம்) நலங்கிள்ளி , (நிர்வாகம்) தமிழ்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திர வேல் உள்பட போக்குவரத் துக் கழக அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவத்துறை, அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 300-க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தின் தாளாளர் டாக்டர் உமையாள் ராமநாத னின் 95-வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண் டாடப்பட்டது. அழகப்பா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர் கள், ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் ஊழி யர்கள் வரிசையாக அணிவ குத்து குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைர வன், அறங்காவலர் தேவி அலமேலு வைரவன் ஆகி யோரின் வழிகாட்டுதலுடன் டாக்டர் உமையாள் ராமநா தன் அவர்களின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினர்.

    ஆச்சியின் பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் இலவச மருத்துவ முகாம் அழகப்பா நர்சிங் கல்லூரி யில் நடைபெற்றது. அதில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, மகப்பேறு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், பிசியோதெரபி, கண் மருத்துவம், ரத்தம் தானம் போன்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மூலம் ரத்த தான முகாம் நடத்தப் பட்டது. முகாமில் 300-க்கும் அதிகமான பொதுமக் கள் பயன் பெற்றனர். குழும மேலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    • சாலை விதிகளை பின்பற்றி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • செந்தில்கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி அரசு ஆண்கள் பள்ளியில் திருப் பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.மாவட்டத்தின் அனைத்து அரசு மேல்நிலை பள்ளி களிலும் விலையில்லா மிதிவண்டிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர் பேரூ ராட்சியில் மொத்தம் 597 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், சைக்கிள்கள் வழங்கப் படுகிறது. மாணவர்கள், சாலை விதிகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டுதல், சைக்கிள் நிறுத்தத்திற்கான மேற்கூரை அமைத்தல், உள்ளிட்ட மேம்படுத்த வேண்டிய பல்வேறு மேம்பாட்டு வசதிகள் குறித்து கோரிக் கைகளும் வரப்பெற்றுள் ளன. அக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகைகளை அமைச்சர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், திருப்பத்தூர் பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு.செந்தில் கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மானாமதுரை தமிழரசி

    எம்.எல்.ஏ. மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்தார். அதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த 5 வகையான உணவு வகைகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் லதாஅண்ணா துரை, துணை தலைவர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் லாடனேந்தல் சுப்பையா, செய்களத்தூர் மகேந்திரன் மற்றும் ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இடைக்காடர் சித்தர் அவதார விழா நடந்தது.
    • புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் கோவில் உள்ளது. இங்கு இடைக்காடர் அவதார விழா நடந்தது. திருவிளக்கு பூஜையை தொடர்ந்து வீதி உலா நடந்தது. பின்னர் ஹோமங்கள், யாகங்கள், பஞ்சபூத வழிபாடு நடத்தப் பட்டது. தொடர்ந்து கோ பூஜை, பரிபூஜை, கிடாய் பூஜை செய்து இடைக்காடர் சித்தருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    இடைக்காடர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சி யளித்தார். நவக்கிரக சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் மதுரை, சிவ கங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காடர் சித்தர் புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வாடுகிறது.
    • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை ஊராட்சியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவ சாயம் நடந்து வருகிறது.

    இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பருவ மழையை நம்பி பெரியகாரை பகுதி விவசாயிகள் ஏக்க ருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் களை பயிரிட்டனர்.

    ஆனால் காலம் கடந்த பின்பும் பருவ மழை கைகொடுக்கவில்லை. இதனால் வயல்கள் வறண்டு விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் போதிய தண்ணீர் பாய்ச்சாததால் நெற்பயிர் கள் கருகி வாடும் நிலையில் உள்ளன. கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினா லும் போதவில்லை. இதனால் பயிர்கள் கருகி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தேவகோட்டை வட்டத்தில் ஒரு சில நபர்களை தவிர பெரும்பாலான விவசாயிக ளுக்கு பயிர் காப்பீட்டு நிவா ரணம் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ள னர். மாவட்ட கலெக்டர் இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டை செய்யலாம் என அறிவித்துள்ள நிலையி லும் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பு பணிகளை இதுவரை அதி காரிகள் மேற்கொள்ள வில்லை.

    எனவே வாடும் பயிர்க ளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • நகர்மன்ற தலைவர் கொசு மருந்து அடித்தார்

    தேவகோட்டை

    தமிழக அரசு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவ டிக்கையை நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையா ளர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராம்நகர் 11 -வது வார்டு சஞ்சீவிபுரம், செந்தில்நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொசு மருந்து அடித்தார். ஆணையாளர் பார்கவி உடனிருந்தார்.

    அந்த வீடுகளில் உள்ள நபர்களை மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுநர் டாக்டர் கிருஷ்ண வேணி, நகராட்சி சுகாதா ரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் பரிசோதனை செய்தனர். நகராட்சி பணி யாளர்கள் வீடு முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வீட்டின் உரிமையாளருக்கு டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் நகரில் டெங்கு அறிகுறி ஏற்பட்ட நபர்கள் இருக்கும் பகுதி களில் காலை, மாலை இரு வேளைகளில் கிருமி நாசி னிகள் தெளிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பணி யாளர்கள் நகர் முழுவதும் தீவிரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை பணிக்காக மூடப்பட்ட பாசன கால்வாயால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வந்த சோதனை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் இங்குள்ள வாகை கண்மாயில் பருவ மழை காலங்க ளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயி களின் விளைநிலங்கள் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளாக மதுரை-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலங்காலமாக ஏக்கர் கணக்கில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த கால்வாயை அதிகாரிகள் சாலை பணிக்காக மூடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சாலையின் ஒரு புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், மறுபுறம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஏக்கர் நிலம் தரிசு நிலம் போல் காட்சி அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், சாலை பணி தொடங்கும் போது அதிகாரிகளிடத்தில் காலங்காலமாக விவசாயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வந்த தூம்பு வாய்க்காலிலேயே புதி தாக கல்வெட்டு பாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் அதிகாரிகள் எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் கண்மாயின் இருபுறமும் மேடாக உள்ள பகுதியில் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கண் மாயிலில் உள்ள தண்ணீரை பாசனத்திற்கு மடை வழியாக திறக்கும்போது வயலின் ஒரு பகுதியில் கண்மாய் போல் தண்ணீர் தேங்கிய கார ணத்தினால் மறுப்பகுதிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறி வருகின்றனர். அதிகாரி களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் ஒரு கிராமமே விவசாயத்தை இழந்து தண்ணீர் இருந்தும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.
    • வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-

    உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.

    எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×