search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாரணி முன்னிலையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுக்கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், லெட்சுமி நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை செல்லும் சாலைக்கு கலைஞர் சாலை என பெயர் வைக்கவும், மகளிர் உரிமைத் தொகை கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் யூனியன் தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் அமுதா லெட்சுமணன், சீதா வைரவன், செல்வி முத்து, முன்னாள் தலைவர் அன்பரசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    • மறவமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவ மங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்திைய முன்னிட்டு 115-வது பிறந்தநாள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    இதில், பொதுவான விவாதப் பொருளாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, வேளாண்மை துறை விஜயகுமார், சுகாதார துறை ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார், மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • 40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் அமைக்கலாம். இந்த திட்டத்தில் 1 அலகுகள் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 60 சதவீத மானியத்துடன் மீன் அங்காடிகள் அமைக்கலாம்.

    மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டுடன் அமைக்க லாம். இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப் பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3 யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும், 9384824553, 9384824273 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற து.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வருகிற மக்களவை தேர்த லில் 2 லட்சம் ஒட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், கட்சி தொண்டர்கள் சோர்வின்றி பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் ஏழை மாணவர் கள் 3 பேருக்கு கல்வி நிதி ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் முன் னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாநில பேச்சாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், வட்டார தலை வர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, முகேஷ், தங்கராஜ், அருள்பிரகாஷ், செல்வம், ஹக்கீம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர்-சிங்கம்புணரி ஒன்றியங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்க ளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.முன்னதாக முறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் பெண் குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட வைகளை வலியுறுத்தி கலெக்டடர் உறுதி மொழியை வாசிக்க அமைச்சர், கிராம மக்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதே போல் மகிபாலன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கொன்னத்தான்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் அழகுபாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் பால்துரை, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜ், ராஜேந்திர குமார், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், துணைச் செயலா ளர் ஷீலா ராணி சொக்கநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வநாயகி, ஊராட்சிஒன்றிய மேற்பார்வையாளர் பெரியசாமி, ஊராட்சி செயலர்களான மதிவாணன், சிவனேஸ்வரி, உதவி யாளர் குரு, மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    • வருகிற 6-ந் தேதி நடக்கிற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
    • இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரு கின்ற 6-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெறு கிறது. இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    இதில் மாணவ, மாணவி கள் பயன்பெறும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கான வழிகாட்டி கையேடுகள், தொழில் முனைவோர் மற்றும் உயர் கல்விக்கான கடன் திட்ட உதவிகள் பெறுவது குறித்து வங்கியாளர்களின் ஆலோ சனை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறையின் ஆலோ சனை மற்றும் உயர்கல்வி ஆலோசனை வழங்கப்பட வுள்ளது.

    மேலும் இக்கருத்தரங் களில் மாணவ, மாணவிகளி டம் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அதற் கேற்ப உரிய விளக்கங்களை அளிப்பதற்கும் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக் கான விளக்கங்களை கேட் டறிந்து பயன்பெற வேண் டும் என அவர் கூறியுள்ளார்.

    • வி.ஏ.ஓ. தாக்கப்பட்டதைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் அருகே உள்ள அய்யாபட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 56). இவர் சிராவயல் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வேலைமுடிந்து திருப்பத்தூரில் இருந்து சிராவயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இருசக்கர வாகனம் பின்னால் வந்தது. அதில் மர்மநபர்கள் இருந்தனர். அவர்கள் திடீரென பிச்சைமுத்துவின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர். அதில் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி உருட்டைக் கட்டையால் பிச்சைமுத்துவை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பிச்சைமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
    • போலீசாருக்கு ஆதரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் உள்ள பூக்கடை உரிமையா ளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெய ரில் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு மேல் எந்த பூக்கடைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அன்றைய தினம் அவர் மட் டுமே பூ வியாபா ரம் செய்து கொள்வார்.

    இவர் மட்டும் விற்பனை செய்வதால் அதிக விலைக்கு பூமாலைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும் இது பொதுமக்க ளிடையே மிகுந்த மன வேத னையை அளித்து வந்தது. இதுதொடர்பாக நடவ டிக்கை கோரி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியா னது.

    இதன் எதிரொலியாக தேவகோட்டை டி.எஸ்.பி. பார்த்திபன், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி, நமச்சிவாயம் மற்றும் போலீசார் பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் 25-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுதா தலைமை யில் பொதுமக்கள் இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப் பட்டது.

    கூட்டத்தில் இன்ஸ்பெக் டர் சரவணன் பூக்கடை உரி மையாளர்களிடம் குத்தகை கடையால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின் றனர். மார்க்கெட் நிலவரப் படி அன்றாடம் பூ விற்பனை செய்து கொள்ளலாம். பொது மக்களின் கோரிக்கை ஏற்று இனிவரும் காலங்களில் பூ வியாபாரிகள் சங்கம் குத்தகை என்ற பெயரில் பூக்களை மொத்தமாக வாங்கி அதிக விலை நிர்ணயம் செய்து பொது மக்களை பாதிக்கும் வகையில் விற்பனை செய்ய கூடாது.

    பூக்கள் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. அதை பதுக்குபவர் கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும். தனி நபர்களும் உதிரி பூக்களை விற்பனை செய்யலாம். தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ேமலும் போலீசாருக்கு ஆத ரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

    • வட மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் தி.மு.க. சார்பில் வட மஞ்சு விரட்டுப் போட்டி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் பங்கு கொண்டன. இதில் தனித்தனி குழுக்களாக 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பிலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல், மாநில இலக்கிய அணி் தலைவர் தென்னவன், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணசங்கீதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், துணை அமைப்பாளர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பிளாசா ராஜேஸ்வரி சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான்சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுகா தாரத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு திட்டங்களை விளக்கி பொதுமக்கள், விவசாயிகள் கூறினர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்கி யலட்சுமி அர்ச்சுணன். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, துணைத் தலைவர் முத்து சாமி, வட்டாட்சியர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தாயமங்களம் ரோடு, மற்றும் ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை மானா மதுரை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கல்குறிச்சி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு பணியில் உள்ள சிப்காட் போலீசார் கிராம சபை கூட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொன்னாகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    காந்தி ஜெயந்தியை முன் னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிவக ங்கை சட்டமன்ற உறுப்பி னர் பி.ஆர்.செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் அவர் பேசும்போது "பெற் றோர்கள் தங்கள் பிள்ளை களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். தீய வழியில் சென்று விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பெற் றோர்களுக்கு உண்டு என் றும் தற்போது பரவி வரும் நோய்களில் இருந்து கிராம மக்கள் கவனமாக பாது காத்துக் கொள்ள வேண்டும். சுய வைத்தியம் செய்து கொண்டு அலட்சியமாக இருந்து விடாமல் உரிய மருத்துவர்களை அணுகி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறி னார்.

    இதில் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, பொன்னா குளம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகை சாமி, சித்தலூர் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டியில் சென்னை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி பிரபு டெண் டல் மருத்துவமனை, மாவட்ட பிஸிக் அலையன்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடை பெற்றது. இதில் கன்னியா குமரி, தூத்துக்குடி, தஞ்சா வூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்பட 30 மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பாடி பில்டர்ஸ் கலந்து கொண்டனர்.

    போட்டிகள் மாற்றுத்தி றனாளிகள், மாஸ்டர்ஸ் உள்பட பல்வேறு எடை பிரி வுகள் என நடைபெற்றது. இதுதவிர பாடி பில்டிங், மென்ஸ் பிரிவு, கிளாசிக் பிரிவு, மாற்றுத்திறனாளி களுக்கான பாடி பில்டிங் ஆகிய பிரிவுகளாக மொத் தம் 20 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் பாடி பில்டிங் டைட்டில் வின்ன ராக சென்னையைச் சேர்ந்த ராகேஷ் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வென்றார். கிளாசிக் மற்றும் மென்ஸ் பிரிவு வின்னராக சென்னை யைச் சேர்ந்த ஜிம்மி பரிசு களை பெற்றார். இதேபோல் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் பரிசு கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாங்குடி, எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந் தர் ரவி, பிரபு டெண்டல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் துரைகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான ஏற்பாடு களை சிவகங்கை மாவட்ட பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் மற்றும் பிரபு டெண்டல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரபு, மாநில பிஸிக் அலையன்ஸ் தலைவர் பொன்னம்பலவா ணன், துணைத்தலைவர் ராமசாமி, பொது செயலா ளர் கார்த்திகேயன் கிருஷ் ணன், கூடுதல் செயலாளர் திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், காரைக்குடி கிச்சன் கங்கா அம்பரீஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    ×