search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • லோக் அதாலத் முகாம்களில் ரூ.3.85 ேகாடி நிவாரணம் கிடைத்தது.
    • இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆணைக்குழு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்ற வியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைவா், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, போக்சோ நீதிபதி சரத்ராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சார்பு நீதிபதி பரமேஸ்வரி சுந்தர ராஜ், குற்றவியல் நீதிதுறை நடுவா்கள் அனிதா கிரிஸ்டி, குற்றவியல் செல்வம், வழக்கறிஞா் ராம்பிரபாகா்் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனா்.

    இதில் 65 குற்றவியல் வழக்குகளும், 131 காசோலை மோசடி வழக்குகளும்இ 88 வங்கிக் கடன் வழக்குகளும், 73 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 49 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 136 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 2 ஆயிரம் மற்ற குற்றவியல் வழக்கு களும் என மொத்தம் 2 ஆயிரத்து 542 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டு 1,878 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டன.இதன் மூலம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 433 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 500 வழக்குகள் பரிசீல னைக்கு எடுக்கப்பட்டு, 74 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டன.

    இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    • அரசு பள்ளிகளில் புதிய நூலகம்- கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
    • இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்ச ருமான ப.சிதம்பரம் கல்வெட்டுகளை திறந்து வைத்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றினார்.

    உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை திமுக நகரச் செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர செயலாளர் வழக்கறிஞர் இரவுசேரி சஞ்சய், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் புகழேந்தி, இளங்குடி முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.78 லட்சம் மதிப்பிலான மகாத்மா காந்தி நூலகத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ப.சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் சிதம்பரம் எம்.பி. பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சிறப்பு வாய்ந்த தாகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபடும்.இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்தவர் இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்புராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிரணி தலைவி இமய மடோனா, காரைக்குடி நகர தலைவர் பாண்டி, தேவகோட்டை நகர தலைவர் சஞ்சய், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, நகர செயலாளர் குமரேசன்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், துணை தலைவர் பாலா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மாங்குடி, அண்ணா துரை, காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், வட்டார தலைவர்கள் கருப்பையா, செல்வம், வர்த்தக அணி ஜெயப் பிரகாஷ் உள்பட நிர்வா கிகள், மகளி ரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, கலெக்டர் ஆஷா அஜித், கார்த்தி சிதம்பரம் எம்.பி., வழங்கினர்.

    பி்ன்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 2 சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 5-ந்தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பில்கடன் ஆணைகள் வழங்கப்பட்டது.37 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப் பம் பெறப்பட்டது.

    காரைக்குடி சிறப்பு முகாமில் 65 மா ணவர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பில் கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாணவர்கள் ரூ.் 1.73 கோடி மதிப்பில் புதிய கல்வி கடனுதவி பெற, விண்ணப்பித்துள் ளனர்.

    மொத்தமாக 104 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்கி (வயது 26). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் விக்கியை தனியாக பேச அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் விக்கியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட விக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    • தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அஹமது கான் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் நைனா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி களுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் முடிவுற்ற சுகாதார திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பெரிய கருப்பன், சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயன்பாட் டிற்கு திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில், ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சிப்பள்ளி கூடுதல் விடுதி, ஆய்வக கூடுதல் கட்டிடங்கள் ஆகியவைகளை ஒருங்கி ணைத்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென புதிய கட்டி டங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடமும், இது தவிர ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முத்தனேந்தல் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் செஞ்சை - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் முத்துப்பட்டிணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாரநாடு, விராமதி, புளியால் ஆகியவைகளில் தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 6 துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை கள் பிரிவு கட்டிடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாங்குடி எம்.எல்.ஏ., ஆவின் பால்வள தலைவர் சேங்கை மாறன், பிரான்மலை ஊராட்சி மன்றத்தலைவர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழடி ஊராட்சியில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடிஊராட்சியில் பாண்டிய மண்டல பேரமைப்பு மற்றும் வைகை உழவர் பிரிவு பசுமை பூமி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு விதைதிருவிழா நடந்தது. சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி டாக்டர் சரோஜினி தொடங்கி வைத்தார். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கிட சுப்பிரமணியன் வரவேற்றார். அருட்தந்தை ஜெகத்கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தாளான்மை ஆசிரியர் பாமயன் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு பற்றியும் பாரம்பரிய நெல் விதைகளை பற்றி பேசினார்கள்.

    விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரான உணவுகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகள், வேளாண் பொருள்கள், இயற்கையான மருத்துவ குணமுடைய தாவரங்கள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடந்தது. முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலயன் கோட்டை சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தில் சேதுபாஸ்கரா குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லூரி தாளாளர் சேது குமணன் வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார். கவுரவ விருந்தினர்களாக காரைக்குடி 9 -வது தமிழ்நாடு பட்டாலியன் தே.மா.ப கட்டளை அதிகாரி கர்னல் ரஜ்னிஷ் பிரதாப், முன்னாள் அமைச்சர் தென்னவன், கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், கோயம்புத்தூர் அலெக்சாண்டர் குதிரை ஏற்ற கழக நிறுவனர் சக்தி பாலாஜி, கூட்டுறவு பால் உற்பத்தி சங்க தலைவர் சேங்கை மாறன், சிங்கப்பூர் தொழிலதிபர் துவார்.சந்திரசேகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், தேவகோட்டை நகர செயலாளர் பாலா, திருப்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட மாணவரணி ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், திருப்புத்தூர் ஒன்றிய இளைஞரணி புதூர்.கண்ணன், பரணி மற்றும் கல்லூரி பேராசி ரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவர்கள் 39 பேருக்கு ரூ.2.57 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
    • தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாண வர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம் கள் நடத்திட திட்டமிடப்பட் டது. அதன் தொடக்கமாக சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங் கியது. இம்முகாமில் விண் ணப்பித்த மாண வர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக் கப்பட்டு அதன்படி நேற்றைய தினம் மொத்தம் 39 பேருக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் ஆணை–கள் வழங்கப் பட்டுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட 37 மா–ணவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற் கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதி யான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவு களை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள் ளது. இதேபோன்று வருகின்ற 8-ந்தேதி அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பத்திலும் மா வட்ட அளவி லான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன் பெற்றுள்ள மாணவர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்து ரைத்து, பயன்பெற செய்வ தற்கான நடவடிக்கை–களில் ஈடுபடவேண்டும்.

    மேலும் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவ கங்கை சுற்று வட்டா ரத்தில் இயங்கும் 18 வங்கி களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாண வர்கள் சமர்ப்பித்த விண்ணப் பங்களை பெற்றுக் கொண்டனர்.

    • பணித்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் அமைந்துள்ள பிர சித்தி பெற்ற பணித்துறை விநாயகர் கோவில் அமைந் துள்ளது. சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமான பணியின் போது இந்த விநா யகர் கோவில் அரசு அலுவ லர்களால் பிரதிஷ்டை செய் யப்பட்டது.

    40 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறிய கோவிலாக இருந்ததை அகற்றி ஆகம விதிப்படி புதிதாக கட்டப் பட்டது. கட்டுமானப்பணி கள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட் டன.

    பின்னர் மங்கள வாத்தி யங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத் தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப் பட்டது.

    தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப் பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

    • வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் வ.உ.சி அறக் கட்டளை மற்றும் காரைக் குடி வட்டார வெள்ளாளர் சங்கம் இணைந்து நடத்தும் 37-ஆம் ஆண்டு விழா மற்றும் தியாகச்செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் விழா காரைக்குடியில் நடைபெற்றது. வ.உ.சி அறக்கட்டளை பொருளாளர் ராஜமாணிக்கம்பிள்ளை வரவேற்றார். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங் கத்தின் தலைவர் சேவுகன் பிள்ளை தலைமை வகித்தார்.

    மதுரை மாருதி குரூப்ஸ் நிறுவனர் மாருதி பாலகிருஷ்ணன் பிள்ளை வ.உ. சிதம்பரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். திருச்சி இந்தியன் வங்கியின் மேனாள் மண்டல மேலாளர் சோமையா பாரதி பிள்ளை பரிசுகளை வழங்கினார். வ.உ.சி அறக்கட்டளையின் தலைவர் சபாபதி பிள்ளை, செயலாளர் முத்து ராமலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் பிள்ளை, முல்லை கொடி உள்ளிட்டோர் பலர் பேசினர். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    ×