என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆனைமலையில் 217 குவிண்டால் கொப்பரை ரூ.15.43 லட்சத்துக்கு ஏலம்
- முதல் தர கொப்பரை 242 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் ரூ.7,570க்கும், அதிகபட்சம் ரூ.8,185க்கும் விற்பனையாகியது.
- 2-ம் தர கொப்பரை 211 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,350க்கும், குறைந்தபட்சம் ரூ.5400க்கும் விற்பனையாகின.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 85 விவசாயிகள் 453 மூட்டைகளில் கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது.
கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் அதிகரித்துள்ளதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.
ஆனைமலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:-
ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 453 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் தரம் பிரித்து கொப்பரை ஏலம் விடப்பட்டது.
முதல் தர கொப்பரை 242 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் ரூ.7,570க்கும், அதிகபட்சம் ரூ.8,185க்கும் விற்பனையாகியது.
2-ம் தர கொப்பரை 211 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,350க்கும், குறைந்தபட்சம் ரூ.5400க்கும் விற்பனையாகின.
7 வியாபாரிகள் 85 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குவிண்டாலுக்கு ரூ.70 விலையும் அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 217 குவிண்டால் கொப்பரை ரூ.15.43 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.