search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி பேரூராட்சி மன்ற கூட்டம் புறக்கணிப்பு: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 5 கவுன்சிலர்கள்
    X

    மாரண்டஅள்ளி பேரூராட்சி மன்ற கூட்டம் புறக்கணிப்பு: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 5 கவுன்சிலர்கள்

    • தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.
    • 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.

    அதனை தெடர்ந்து வடிகால் வசதி, தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், ஆடு அடிக்கும் தொட்டி, சுற்று சுவர், நீரேற்றும் மின் மோட்டார், சமுதாய கூட கட்டிடம் பராமரிப்பு, 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதில் அரசு சத்திரம் மீட்பு மற்றும் துரோயதனன் படுகள இடத்தில் சமுதாய கூடம் கட்டும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம் தலைமையில் சத்யா சிவகுமார், அபிராமி காந்தி, அனிதா ரமேஷ் ஆகியோர் கூட்டத்தை வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×