search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கே.கே.நகர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் 6 பேர் கைது
    X

    கே.கே.நகர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் 6 பேர் கைது

    • வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற போது ரமேசை, காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கைதான 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குட்டி (வயது40). ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற போது ரமேசை, காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராகேஷ், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மோகன்ராஜ், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த தனசேகர், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த உதயகுமார், திருப்பூரை சேர்ந்த தினேஷ்ராஜன், மீனம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கைது செய்யப்பட்ட ராகேஷ் மீது கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியில் நடந்த இரட்டை கொலை வழக்கு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நிலம் விற்பனை செய்வதில் ராகேசுக்கும், கொலையுண்ட ரமேசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மேலும் ராகேசின் மனைவி தொடர்பான பிரச்சினையிலும் ரமேஷ் தலையிட்டு திட்டம் தீட்டிவந்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த ராகேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரமேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×