search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல்- கூலி தொழிலாளி கைது
    X

    விக்கிரவாண்டி அருகே புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல்- கூலி தொழிலாளி கைது

    • புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
    • சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் சோதனை சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் படி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டு பழனி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் துண்டு துண்டாக இருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், புதுவை மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பரமணி (வயது 52) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பையை எடுத்துச் சென்று பனையபுரம் பெட்ரோல் பங்க் அருகில் நிற்பவர்களிடம் அளித்து வந்தால் கூலி தருவதாக ஒருவர் கூறியதும், அதனால் இந்த பையை சுப்பரமணி எடுத்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.

    மேலும், சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×