search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரீனா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே அதிவேகத்தில் சென்ற 8 சொகுசு கார்களுக்கு அபராதம்
    X

    மெரீனா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே அதிவேகத்தில் சென்ற 8 சொகுசு கார்களுக்கு அபராதம்

    • கார் ஓட்டி வந்தவர்கள், மாமல்லபுரத்தில் கார் பந்தயம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சில சாலைகளை சுற்றி வந்ததாகவும், தெரிவித்தனர்.
    • அதிநவீன சொகுசு கார்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து கார்களை அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் வழியாக அதிவேகத்தில் 8 சொகுசு கார்கள் வரிசையாக செல்வதாக, போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு இன்று காலை தகவல் சென்றது.

    இந்த கார்கள் மும்பை, பாண்டிச்சேரி, தமிழ்நாடு பதிவுகள் கொண்டவை என்றும் தெரிய வந்தது. இந்த கார்களை போக்கு வரத்து போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது கார்கள் நிற்காமல் சென்றது.

    மீண்டும் நேப்பியர் பாலம் அருகே அந்த கார்கள் திரும்பி வந்தபோது அதை போக்கு வரத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த கார்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை. இதனால் கார்களை ஓட்டியவர்கள் குடிபோதையில் உள்ளனரா? என்று பரிசோதனை செய்தனர்.

    ஆனால் அவர்கள் மது அருந்தவில்லை. கார் ஓட்டி வந்தவர்கள், மாமல்லபுரத்தில் கார் பந்தயம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சில சாலைகளை சுற்றி வந்ததாகவும், தெரிவித்தனர்.

    இருந்தபோதிலும்.அதிவேகத்துடன் கார்களை இயக்கியது, உரிய விதிப்படி நம்பர் பிளேட் பொருத்தாதது, அதிக சத்தம் கொண்ட ஒலியை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின படி அதிநவீன சொகுசு கார்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து கார்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×