search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி படத்துக்கு பாலாபிஷேகம்- அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்

    • எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு ஒருசில தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
    • அ.தி.மு.க. தலைமை கழகம் ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

    ஜூலை 11-ந்தேதி நட ந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே போல் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் குவிந்தனர். அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பி கொண்டாடினர். பட்டாசு வெடித்தும் மகிச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். எடப்பாடி பழனிசாமியின் படத்தையும் கையில் ஏந்தியபடி உற்சாகமாக கோஷமிட்டனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு ஒருசில தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

    அதே போல் தமிழகம் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×