என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: விழுப்புரம்-கண்டமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
- எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம்-கண்டமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் புதுவை-விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை கண்டித்து விழுப்புரம் நகர அ.திமு.க. சார்பில் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நிர்வாகிகள் மந்தக்கரை ஜானகிராமன், ராஜகோபால், லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் புதுவை-விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் (வடக்கு) கண்ணன், ராமதாஸ் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சாலை மறியல் காரணமாக சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.
மேல்மலையனூர் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு தொடர்ந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜதத்தன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், அவை தலைவர் துளசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செல்வம் வரவேற்றார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சத்தியராஜ், ஒன்றில் தகவல் தொழில் நுட்ப செயலாளர் லோகநாதன், ஒன்றிய துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் அயாத், ஷாகத், பாலாஜி, துரை காசிநாதன், காசி பாலாஜி, தனசேகர், பூங்காவனம், தர்மன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்