என் மலர்
உள்ளூர் செய்திகள்
மகேந்திரமங்கலம் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
- சுகன்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தீபாவளி பண்டிகை கொண்டாட தனது தாய் வீடான மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளிக்கு வந்துள்ளார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளி கிராமத்தில் நள்ளிரவில் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்கின்ற வேலவன் (37) என்பதும், இவர் பெங்களூரில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சுகன்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வேலவன் பலமுறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் தனது கணவரை தீர்த்து கட்ட சுகன்யா முடிவு செய்துள்ளார்.
அப்போது தீபாவளி பண்டிகை கொண்டாட தனது தாய் வீடான மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளிக்கு வந்துள்ளார்.
அங்கு நேற்றிரவு நடைபெற்ற நடன நிகழ்ச்சி காண்பதற்காக வேலவன் தனது மனைவி குடும்பத்துடன் நடன நிகழ்ச்சி கண்டுக்களிக்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மது போதையில் வேலவன் இருந்துள்ளார். அப்போது சுகன்யா தனது கள்ளக்காதலனை வரவழைத்து அங்கு ஒரு தோட்டத்தில் வேலவனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு கொலையாளியை தேடி வருகின்றனர்.