search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரை வெட்டிய 2 ரவுடிகள் கைது
    X

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரை வெட்டிய 2 ரவுடிகள் கைது

    • தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார்.
    • வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தருண் குமார் (வயது 26). இவர் எம்.சி. ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை நாகராஜ் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 19-ந்தேதி வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார். இதனை தொடர்ந்து தருண்குமார் எண்ணூர் கடற்கரை சாலைக்கு சென்றுள்ளார். அப்போது வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தருண்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காசிமேட்டை சேர்ந்த ஜெகன் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாய்ராம் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வெள்ளை நாகராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×