என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விராலிமலை அருகே விபத்து: லோடு ஆட்டோ மோதி 7-ம் வகுப்பு மாணவர் பலி
- விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை வேலு, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். மகன் கனகராஜ் (வயது 12) விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் குழந்தைவேலு தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை மகனை குழந்தைவேலு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து பள்ளிக்கு அழைத்து சென்றார்.
விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.
தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் கனகராஜ் ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த விராலிமலை போலீசார் பலியான மாணவர் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தைவேலு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளிக்கு செல்வதற்காக கூறிவிட்டு சென்ற ஒரு சில நிமிடங்களில் மகன் இறந்ததை அறிந்து அங்கு வந்த அவரது தாய் சரஸ்வதி மகனின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைவேலுவின் உடன் பிறந்த சகோதரர் செல்வம் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி இதே பகுதியில் கார் மோதிய விபத்தில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்