search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காது கேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்- கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    X

    காது கேளாதோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்- கலெக்டர் அலுவலகத்தில் புகார்

    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவிகளை சிறப்பு வகுப்புக்கு வர வேண்டும் என்று கூறி வரவழைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், இந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவோம் என்றும், உங்களுக்கு அரசு வேலை, அரசாங்க சலுகைகள் கிடைக்காமல் செய்து விடுவோம் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இங்கு பணியில் இருப்பதால், பள்ளியின் நிர்வாகத்தை தங்களின் குற்ற செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் இந்த பணிக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக தொடர் புகார்கள் வருகிறது. ஒரு ஆசிரியர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அந்த கேக்கை மாணவிகளுக்கு ஊட்டி விட்டதாக ஒரு புகாரும் உள்ளது. மற்றொரு ஆசிரியர் சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி சில மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×