search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் நிழற்குடை அமைக்கும் விவகாரம்: மடத்துக்குளத்தில் தி.மு.க.- பா.ஜ.க.வினர் மோதல்
    X

    பயணிகள் நிழற்குடை அமைக்கும் விவகாரம்: மடத்துக்குளத்தில் தி.மு.க.- பா.ஜ.க.வினர் மோதல்

    • நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
    • இருதரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் ஊராட்சியில் பொள்ளாச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி பா.ஜ.க.வினர் தடுத்தனர். மேலும் இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து, பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செய்யவிடாமல் பா.ஜ.க. வினர் இடையூறு செய்வதாக கூறி தி.மு.க. வினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதையடுத்து உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மடத்துக்குளம் தாசில்தார் செல்வி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களுடன் தாசில்தார் செல்வி பேச்சு வார்த்தை நடத்தினார்.உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருதரப்பினரும் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், இருதரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×