search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    8-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    8-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு

    • தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. 22 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 8 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,040-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,440 ஆக உயர்த்தது. அதன்பிறகு மீண்டும் உயர்ந்து 23, 24-ந்தேதிகளில் ரூ.37,568-க்கு விற்பனையானது. 25-ந்தேதி ரூ.37,760 ஆக உயர்ந்தது. 26-ந்தேதி ரூ.37,824-க்கு விற்றது.

    நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.62,300-க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×