என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே வியாபாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை
- கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார்.
- சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
கண்டமங்கலம்:
மதுரையை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.
அங்கிருந்து வத்தல், வடகம் செய்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், எல்.இ.டி. டி.வி., ஹோம் தியேட்டர், பித்தளை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை சின்னச்சாமி ஊருக்கு திரும்பினார். அப்போது தனது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போனதை கண்டு பதறி போனார்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.