என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருமுட்டை விவகாரம்- ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
- ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- மேலும் புதிதாக நோயாளிகள் சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
சென்னை:
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக ஈரோடு, சேலம், ஓசூரில் உள்ள 4 ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். மேலும் பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக சுதா ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடப்பட்டது. மேலும் புதிதாக நோயாளிகள் சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் 12 வாரங்களுக்குள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.