search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான 20 கட்டிடங்களும் திறந்து வைக்கப்படுகிறது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல்லில் மூலிகை மருத்துவ பயிரான அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மூலிகை விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய நிகழ்ச்சியாக மத்திய விவசாய ஆராய்ச்சி கழகம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பில் அஸ்வகந்தா மூலிகை பயிர் சாகுபடி செய்ய நடைமுறைபடுத்தப்படுகிறது.

    மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான 20 கட்டிடங்களும் திறந்து வைக்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்புற உள்ளாட்சித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சர்கள், துணை செயலாளர்கள், அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி அந்தந்த துறைகளின் சார்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உள்ளாட்சித்துறை சார்பில் வீடுகள்தோறும் கண்காணித்து தேவையற்ற தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தினமும் ஆயிரம் இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் டெங்கு மற்றும் எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லை. மதுரையில் கூட மருந்து கிடங்கு உள்ளது. நீங்களே போய் பாருங்கள். தட்டுப்பாடு இருந்தால் சொல்லுங்கள்.

    வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×