search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.

    விழுப்புரம் அருகே பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

    • தீபாவளி பண்டிகை என்பதால் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கூட்டம் இல்லை.
    • இதனால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தீபாவளி பண்டிகை என்பதால் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கூட்டம் இல்லை. இதனால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

    அதிர்ச்சியடைந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திசை நோக்கி சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்கிருந்து போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பாலு (வயது 39). விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து எதற்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×