என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னையில் ஒரு வாரத்தில் 2,600 கடைகளுக்கு அபராதம்- ரூ.7¾ லட்சம் வசூல்
- மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரையில் 14.09.2022 முதல் 21.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 272 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடம் இருந்து 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 245 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 30 கடை உரிமையாளர்களிடம் இருந்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குப்பைத்தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 14.09.2022 முதல் 20.09.2022 வரை ஒரு வாரத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 7,479 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 2,601 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்