search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    இன்று காலை மழையில் நனைத்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை படத்தில் காணலாம்.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • தீபாவளி முடிந்து இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
    • வழக்கமாக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இலங்கை அருகே கிழக்கு பகுதியை மையமாக வைத்து நீடித்துக் கொண்டிருந்த காற்று சுழற்சி தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. மேலும் கிழக்குப் பகுதியை மையமாக வைத்து மன்னார் வளைகுடா வரை நீண்ட சுழற்சி ஏற்பட்டுள்ளது.

    மேலும் வங்கக்கடல் அந்தமான் பகுதியில் இருந்து தாய்லாந்து வரை காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டு அந்தமான் பகுதியில் மையம் கொண்டுள்ளது. 2 தாழ்வு நிலை காற்றழுத்த மையங்களும் சமநிலையில் இருப்பதால் இரண்டையும் மையமாகக் கொண்டு ஒரு காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இந்த இணைப்பு சுழற்சியினால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த சுழற்சியால் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு இருந்தது. அதேபோல் புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது.

    இலங்கை பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கில் நகரும்பொழுது தமிழகம் முழுவதும் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுத்தது. இந்த நிலையில் இன்று விடியற்காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த சாரல் மலையால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நனைந்தவாரே பள்ளிக்கு சென்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    தீபாவளி முடிந்து இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

    Next Story
    ×