search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை... விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை... விவசாயிகள் மகிழ்ச்சி

    • சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
    • சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புறங்களில் சாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். அதன்படி வழக்கமாக நடைபெறும் குந்தராப்பள்ளி வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். குந்தாரப்பள்ளி சாலையில் ஆடுகளை ஏராளமான சரக்கு வாகனங்களில் கொண்டு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான போதும், வெள்ளாடுகள் விற்பனையான அளவிற்கு, செம்மறி ஆடுகள் விற்பனை ஆகவில்லை எனவும் வியாபாரிகள் கூறினர். இதேபோல் சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆடுகள் மற்ற நாட்களை விட நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×