search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கிழங்கு ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஒரே நேரத்தில் போராட்டம்- அதிகாரிகள் நேரில் ஆய்வு
    X

    தனியார் கிழங்கு ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஒரே நேரத்தில் போராட்டம்- அதிகாரிகள் நேரில் ஆய்வு

    • ஆலைக்கு எதிராக சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆலைக்கு கிழங்கு அரைக்க கொடுக்கும் விவசாயிகள் சுமார் 500 பேர் ஆலைக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் நவீன கிழங்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் சேமித்து வைத்து அப்படியே வெளியேற்றுவதால் பீனி ஆறு மாசடைகிறது.

    இதனால் விவசாய நிலங்களும் பாழ்படுகிறது என்று கலெக்டரிடம் சமீபத்தில் விவசாயிகள் சார்பில் மனு தரப்பட்டது.

    இதையடுத்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இருப்பினும் ஜெனரேட்டரை பயன்படுத்தி அந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த ஆலைக்கு எதிராக சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே நேரத்தில் ஆலைக்கு கிழங்கு அரைக்க கொடுக்கும் விவசாயிகள் சுமார் 500 பேர் ஆலைக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர்.

    ஒரே நேரத்தில் 2 தரப்பிலும் நடக்கும் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரூர் கோட்டாட்சியர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை அதிகாரி செந்தில்குமார், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுசூழல் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த ஆலையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×