search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் டி.ஜி.பி. ஆபீசில் புகார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் டி.ஜி.பி. ஆபீசில் புகார்

    • மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அந்த பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலவர வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, டி.ஜி.பி. ஆபீசில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'எனது மகளின் மரணம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் தொடர்ந்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    ஸ்ரீமதி பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை யூடியூப் சேனல் தெரிவித்து வருவதாகவும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் தாய் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×