search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனாம்பேட்டையில் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.5 லட்சம் வழிப்பறி
    X

    தேனாம்பேட்டையில் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.5 லட்சம் வழிப்பறி

    • ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மூன்று பேர் பறித்துச் சென்றதாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் மைதீன் புகார் அளித்துள்ளார்.
    • பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மைதீன். இவர் உலர்ந்த பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு தெரிந்த நஜிம் என்பவர் சில வங்கிக் கணக்குகளை கொடுத்து, அவற்றுக்கு பணம் அனுப்ப சொல்வது வழக்கம். இந்த வேலையை செய்வதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் என கமிஷன் கிடைத்துள்ளது.

    அதன்படி, நஜீம் கொடுத்த ரூ.9லட்சம் பணத்துடன் நேற்று இரவு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை இந்தியன் வங்கிக்கு மைதீன் சென்றார். அங்குள்ள, டெபாசிட் எந்திரத்தின் மூலம் 4 லட்சம் ரூபாயை (சில கணக்குகளில்) செலுத்தி உள்ளார். மீதமுள்ள ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வேறொரு வங்கி டெபாசிட் இயந்திரத்திற்கு செலுத்த சென்றார்.

    அப்போது கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி தன்னிடம் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மூன்று பேர் பறித்துச் சென்றதாக, தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் மைதீன் புகார் அளித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×