search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டை காட்டிலும் 13 அடி குறைவாக உள்ள வைகை அணை நீர்மட்டம்
    X

    கடந்த ஆண்டை காட்டிலும் 13 அடி குறைவாக உள்ள வைகை அணை நீர்மட்டம்

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. அணைக்கு 63 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 667 நீர் திறக்கப்படுகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் சுமார் 5 அடி வரை மணல் உள்ளதால் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பருவமழையின்போது முழுகொள்ளளவில் இருந்த அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் சீராக குறைந்தது. தற்போது மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து 345 கனஅடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.02 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மழை கைகொடுத்ததால் இதேநாளில் அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக இருந்தது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் 13 அடி குறைவாக உள்ளதால் வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது.

    பருவமழை கைகொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும். இருந்தபோதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது 2-ம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர் முற்றிய நிலையில் உள்ளது. அதன்பின்னர் அறுவடை நடைபெறும் என்பதால் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்படும். இதனால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    எனவே மழை கைகொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. அணைக்கு 63 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 667 நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.37 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 16 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×