என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் தவறுதலாக தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
- மது போதைக்கு அடிமையான அவர் தினமும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- குடிபோதை தகராறில் தவறுதலாக தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை, பீட்டர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது60).ஆட்டோ டிரைவர். இவரது மகன் குமார். பெயிண்டர். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மது போதைக்கு அடிமையான அவர் தினமும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதே போல் நேற்று இரவும் குமார் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வந்தார். அப்போது அவ்வழியே சாலையில் குறுக்கே சென்ற பூனை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் அந்த பூனை இறந்து போனது.
இதனை கண்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக வரும்படி குமாரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த குமாரின் தந்தை வீரமுத்துவும் அங்கு வந்தார். அவர் மகனை கண்டித்து அங்கிருந்து செல்லும்படி அறிவுரை கூறினார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் மதுபோதையில் இருந்த குமார் தொடர்ந்து வேலனிடம் மோதலில் ஈடுபட்டார். திடீரென குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலனை வெட்ட முயன்றார். அந்த நேரத்தில் வீரமுத்து குறுக்கே வந்ததால் தவறுதலாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
மேலும் குமார் கீழே விழுந்த போது அவரது அருகில் கிடந்த கல் மீது விழுந்தார். இதில் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை மீட்டு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதை தகராறில் தவறுதலாக தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்