என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இங்கிலீஸ் கால்வாயில் 72 கி.மீ கடல் தூரம் நீந்தி தேனி சிறுவன் சாதனை
- கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
- குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது.
தேனி:
தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.
ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.
தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.
இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.
ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.
தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.
இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.