search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.
    • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி.மக்கள் மன்றத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ஆரோக்கியகுமார் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா திட்ட விளக்கஉரையாற்றுகிறார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார், ராமகிரு ஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறுகிறார்.

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
    • நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் ேகாவிலில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் வாகனங்கள் குமுளி, கூடலூர், கம்பம் வழியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கம்பத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் அதன்படி சென்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள ேவப்பம்பட்டியை சேர்ந்த காமாட்சி மனைவி சுஜிதா (வயது24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சுஜிதா வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியபிரதேசம் மாநிலம் முறைனா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனம் (24). இவர் கடந்த 10 மாதங்களாக தேனி கோட்டூர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரது கணவர் சத்தியேந்திரன் வீட்டிற்கு வந்தபோது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.
    • முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியது. மேலும் தண்ணீர் தேவைப்படாததால் முல்லைபெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்றுவரை முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு 1209 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.

    இதேபோல் வைகை அணையில் நேற்று 1899 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நீர்திறப்பு 2099 கனஅடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கு 558 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிற நிலையில் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 115 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கோஷ்டி மோதலில் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசை பகுதியில் உள்ள பராசக்தி கோவிலை 75 ஆண்டுகளுக்கு மேல் இரு சமூகத்தினர் பராமரித்து வந்தனர். இதில் ஒரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் முன்பு இருந்த காலி இடத்தில் கான்கிரீட் போட்டு கம்பிவேலி அமைத்தனர்.

    ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பி வேலியை அவர்கள் அகற்றினர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து பின்னர் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உத்தரவுப்படி ஏ.எஸ்.பி மதுக்குமாரி, சின்னமனுர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்தினர். இந்த தாக்குதலில் ஸ்ரீரங்கன், முருகன், தாமோதரன், தியாகராஜன், செந்தட்டி, செல்வக்குமார், செல்வி, முத்துக்குமார், அர்ச்சுணன், கலைவாணி, சீனியம்மாள், அழகுமலை, சிவா உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் பார்த்திபன், நவீன், சிவா, கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.
    • எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    தேனி:

    கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டு ப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்பட்டன. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்விதகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    கூட்டுறவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நேரடி பயிற்சி , அஞ்சல் வழி, பகுதிநேர பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    எழுத்துதேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கான தேர்வாக இருக்கும். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் விபரம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பலநாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும்,

    கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் கவுதமன் மீன்வள ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மீன்கள்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

    இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 7 கிலோ கெட்டுப்போன மீன்கள் ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேலும் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியா பாரிகளை எச்சரித்தனர்.

    • சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர்.

    இதையடுத்து, 15-வது நிதிக்குழு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா பிளாக், சிமென்ட் சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக திட்டப் பணிகளை மே ற்கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில், திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை யடுத்து சின்னஓவுலா புரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன.

    இதேபோல இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, தெருவின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த முள் தடுப்பு வேலியும் அகற்றப்ப ட்டது. அப்போது சின்ன மனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வாலிபரை குத்தி கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கொலை வழக்கில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மற்றொரு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் சந்தை தெருவை சேர்ந்தவர் செந்தில்(28). இவரை கடந்த 17.5.2016-ந்தேதி கலைச்செல்வம்(28), அவரது தம்பி கலையர சன்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றனர்.

    இதுகுறித்து கம்பம் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உத்தம பாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இதனிடையே கலையரசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உதவி அமர்வு நீதிபதி சிவாஜி குற்றம்சா ட்டப்பட்ட கலை ச்செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    • பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர்.
    • கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(50). இவரது வீட்டிற்கு பின்னால் குமார்(50) என்பவர் வசித்து வந்தார். முருகன் வளர்த்து வந்த கோழி குமார் வீட்டிற்கு சென்றதால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று முருகன் வீட்டு கோழியை குமார் பிடித்து வைத்து கொண்டுள்ளார். அப்போது குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இதுகுறித்து முருகன் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    தங்கள் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த குமார் குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்தனர். மேலும் முருகனையும் கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முருகனின் மைத்துனர் வேல்சாமி (45) என்பவர் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவரை குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழே தள்ளிவிட்டனர்.

    பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து குமார், அவரது மகன் ரெங்கேஸ்வரன், மருமகன் குணசீலன்(34), தங்கபாண்டி(26), பிச்சைமணி(40), முத்தீஸ்வரி(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் மாநில, மத்திய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    தேனி மாவட்டதில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு, மாண வர்கள் இணையதளத்தில் கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கும், பரிசீலனை செய்வத ற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பான் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் நகல், கவுன்லிங் மற்றும் கல்லூரி அட்மிஷன் கடிதம், கல்விக்கட்டண விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

    இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மாடு மேய்த்து கொ ண்டிருந்த மூதாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இவ்வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன்(31). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து திருமண த்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வம் மனைவி பொன்னுத்தாய்(56) என்பவர் தவறான தகவல்களை தெரிவித்து குமரேசனுக்கு திருமணம் நடக்காமல் இடையூறு செய்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாடு மேய்த்து கொ ண்டிருந்த பொன்னு த்தாயை குமரேசன் தாக்கி ெகாலை செய்ய முய ன்றார். இது குறித்து பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் ஜெயமங்க லம் போலீசார் வழக்குபதிவு செய்து கும ரேசனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தேனி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சா ட்டப்பட்ட குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை யும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    ×