என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
- பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- தமிழகத்திலும் ஆட்டோக்களுக்கு வாகனத்தை புதுப்பிக்கும்போது அரசு சாா்பில் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.
திருப்பூர்:
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூா் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணியின் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கான வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கு ஒதுக்கீடு செய்ததுபோல ஆட்டோ தொழிலாளா்களுக்கும் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்து ஆட்டோ தொழிலாளா்களும் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல தமிழகத்திலும் ஆட்டோக்களுக்கு வாகனத்தை புதுப்பிக்கும்போது அரசு சாா்பில் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.