என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராமங்களில் பயன்பாடின்றி கிடக்கும் சோலார் பேனல்கள்
- 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.
- இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயனற்று வீணாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 - 12ம் ஆண்டு சோலார் தெருவிளக்குகள் அமைக்கும் திட்டத்துக்காக 500 வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய ரக மின் உற்பத்தி ஆலைகள், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்டன.சூரிய ஒளி வாயிலாக இயங்கக்கூடிய தெருவிள க்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
சோலார் மின் திட்டம் வாயிலாக தெரு விளக்குகள் உட்பட கிராமங்களில் பயன்படுத்தப்படும் பொது மோட்டார்களுக்கும் இதைப் பயன்படுத்த திட்டமிட ப்பட்டது.இத்திட்டம் வாயிலாக கிராமங்களின் மின் பயன்பாட்டுக்கான செலவுகள் பெரிதும் குறையும் என எதிர்பார்க்க ப்பட்டது.அவ்வகையில் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்கள் சிலவற்றில் சோலார் பேனல் அமைக்கப்பட்டது.
மின்சாரத்தை சேமிக்கவும், மாற்று எரி சக்தியான சூரிய ஒளியை முழு அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் போதிய பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாததால் முடங்கிவிட்டது. கிராமங்களில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றன. தன்னார்வ லர்கள் கூறுகையில், சில கிராம ங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சோலார் தெரு விளக்குகளும், நாளடைவில் காணாமல் போனது. இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும். அரசுத்துறைகளின் தேவையற்ற செலவுகள் குறையும் என்றனர்.