என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி- மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
- நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
- கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவொற்றியூரில் உள்ள சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் 2 பேரும், குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக்கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நண்பர்களுடன் குளித்தபோது, கடலில் மூழ்கி மாயமான மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு(20) என்பவரை கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.