search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி முன்னாள் நகர்மன்ற தலைவர் கொலை?: எஸ்.பி.யிடம் மனைவி பரபரப்பு புகார்
    X

    போடி முன்னாள் நகர்மன்ற தலைவர் கொலை?: எஸ்.பி.யிடம் மனைவி பரபரப்பு புகார்

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
    • எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான முத்து மனோகரன் மனைவி ஜான்சிராணி. தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் முத்துமனோகரன் போடி நகர்மன்ற தலைவராக இருந்தவர். தி.மு.க.வில் விவசாய அணிமாநில இணைச்செயலாளராகவும் இருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். எனது கணவரின் சகோதரர் முத்தையா இறந்தபின் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுகுடும்பமாக வசித்து வந்தோம்.

    தனது சொத்துக்களை எனது கணவர் அனைவருக்கும் பிரித்து கொடுத்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு எனது மகனுக்கு தொழில் செய்து கொடுக்க வேண்டும் என்று கணவரின் அண்ணன் மகன் சேது மற்றும் மகள் ரதிதேவி ஆகியோர் ரூ.3 கோடியை கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறி போடிக்கு அவரது உடலை கொண்டு வந்தனர்.

    எனது கணவர் கொடுத்து வைத்த ரூ.3 கோடியை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர். எனது கணவரை சொத்துக்காகவும், பணத்திற்காகவும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே இந்த இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×