என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து வாலிபர் உயிரிழப்பு
BySuresh K Jangir1 Nov 2022 12:05 PM IST
- குந்தன்குமார் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- குந்தன்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
போரூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது27). இவர் சென்னை ராமாபுரம் சாந்தி நகரில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை குந்தன் குமார் செல்போனில் தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குந்தன் குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குந்தன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குந்தன்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இது குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×