என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்
ByMaalaimalar3 Oct 2023 9:31 AM IST
- பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
- தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.
Next Story
×