என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
123 அடி நீள தோசை தயாரிப்பில் 110 முறை தோல்வி... பிறகு கின்னஸ் சாதனை
- பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.
- கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது.
பெங்களூரு:
ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறை என்று வரும்போது, தோசை ஒருபோதும் ஈர்க்க தவறுவதில்லை. தென்னிந்திய சமையலில் பிரபலமாக அறியப்படும் தோசை புளித்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவுடன் தயாரிக்கப்பட்டது. குறைந்த எண்ணெய் நெய்யுடன் ஒரு ஒட்டாத பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.
இந்த நிலையில் பெங்களூரு பொம்மசந்திராவில் எம்.டி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி 75 சமையல் கலைஞர்கள் குழுவுடன் எம்.டி.ஆர். புட்ஸ் நிறுவனம் இணைந்து லார்மன் கிச்சன் எக்யூப்மென்ட் மூலம் தோசை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 110 முறை தோல்விக்கு பிறகு அவர்கள் 123 அடி நீள தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்த தோசை 54 அடி 8.69 அங்குலம் இருந்தது. 37.5 மீட்டர் நீளம் கொண்டது. சிவப்பு அரிசி மாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள எம்.டி.ஆர். தொழிற்சாலையில் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த தோசை தயாரிப்பில் தலைமை சமையல்காரராக செயல்பட்ட செப் ரெஜி மேத்யூ தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி, "எம்டிஆரில் ஒரு வரலாற்று மைல்கல்லை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 123.03 அடி நீளமான தோசைக்கான கின்னஸ் உலக சாதனை பட்டத்துடன் 100-வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.