என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகாவில் பேனட்டில் தொங்கியபடி போலீஸ்காரரை இழுத்து சென்ற கார்
- போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
- காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் வீடியோ பதிவாகி இருந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் சிமோகா கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசில் பிரபுராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு கல்லூரி அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் போக்குவரத்து விதிகளை மீறி பஸ் நிலையம் நோக்கி சென்றது. இதை கவனித்த போலீஸ்காரர் பிரபுராஜ் அந்த காரை நிறுத்த முயன்றார்.
ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தால் போலீஸ்காரர் பிரபுராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த காரை ஓட்டி வந்த நபர் திடீரென காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். அப்போது போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் ஓட்டினார். சிறிது தூரம் போலீஸ்காரர் பிரபுராஜ் பேனட்டில் தொங்கியப்படி இழுத்து செல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் காரை நிறுத்தியதும் போலீஸ்காரர் பிரபுராஜ் காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்ட வசமாக தப்பினார்.
அந்த நேரத்தில் அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. இந்த காட்சிகளை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில் போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காரை ஓட்டி வந்தது மிதுன்ஜக்டேல் என்பவர் என்று அடையாளம் தெரிந்தது.
மேலும் போலீஸ்காரர் மீது மோதி காருடன் இழுத்து சென்ற மிதுன் ஜக்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிமோகா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமார் கூறினார்.