என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை- ஜம்மு பகுதியில் கூடுதலாக 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
- ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
- பயங்கரவாதிளுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஜம்முவில் கடுவா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் பலியான ஒரு வாரத்திற்குள் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாதிளுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 40 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை கண்டுபிடித்து ஒழிக்க ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் ராணுவமும் இணைந்து தொடர் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பிர்பாஞ்சலின் தெற்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அப்பகுதிக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் 400 முதல் 500 வரையிலான சிறப்பு படை வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூடுதல் வீரர்கள் ஜம்மு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவார்கள் என்றும், இப்பகுதியில் மத்திய ஆயுத போலீஸ் படைகள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.