என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
போலி ஆவணம் மூலம் பணம் மோசடி: 8 பெண்களுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த வங்கி மேலாளர்
- தனது ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.
- இளம்பெண்கள் கேட்கும் போதெல்லாமல் ஹரிசங்கர் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிசங்கர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். அதே வங்கியில் அனிதா என்பவர் ரூ.1 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருந்தார்.
மேலும், இந்த டெபாசிட் தொகையை வைத்து அவர் 75 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக அனிதா பல்வேறு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் தனது ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் மோசடி சம்பவங்கள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.
மே மாதம் 13-ந் தேதியிலிருந்து 19-ந் தேதி வரை அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் 5.70 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காளத்திலுள்ள 28 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் இந்த கையாடலில் ஈடுபட்டது உறுதியானது.
இதுதொடா்பாக அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் முதலில் நடத்திய விசாரணையில், ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதற்காகவும், அவர் கேட்டதால் ரூ.5.70 கோடியையும் அனுப்பி வைத்தாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், ஹரிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது ஹரிசங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் கேரளாவில் தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த சந்தா்ப்பத்தில் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக முதலில் ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்