search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் துன்புறுத்தல் புகார்: பெண்கள் உள்பட 4பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு
    X

    பாலியல் துன்புறுத்தல் புகார்: பெண்கள் உள்பட 4பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 2 பெண்கள உள்பட 4 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு பதிந்திருக்கின்றனர்.
    • பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை கேரள மாநில அரசு அமைத்திருக்கிறது. அந்த குழுவினர் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கும் பதிந்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 2 பெண்கள உள்பட 4 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோழிக்கோடு இலத்தூர் படப்பிடிப்பு தளத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஜூனியர் சிகையலங்கார நிபுணர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொச்சி இன்போ பார்க் மற்றும் கோழிக்கோடு இலத்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டிருந்தது.

    அந்த இரு வழக்குகளும் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிந்துள்ளது.

    Next Story
    ×