search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இஸ்ரோ புதிய செயற்கைக்கோளை 29-ந்தேதி விண்ணில் செலுத்துகிறது
    X

    இஸ்ரோ புதிய செயற்கைக்கோளை 29-ந்தேதி விண்ணில் செலுத்துகிறது

    • செயற்கைக்கோள் வெளிநாட்டு செயற்கைக்கோள் அமைப்புடன் சார்ந்து இருப்பதை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2018-ல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை வருகிற 29-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

    இதனை இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இந்திய பிராந்திய செயற்கைக்கோள் அமைப்பாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விளங்கி வருகிறது. இது 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்று வட்டப்பாதையிலும், 4 சாய்வான புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த செயற்கைக்கோள் வெளிநாட்டு செயற்கைக்கோள் அமைப்புடன் சார்ந்து இருப்பதை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ். போன்ற அமைப்புகளை வெளிநாடுகளை நம்புவது நம்பகத்தன்மையாக இருக்காது. ஏனெனில் அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு முகமைகளால் அவைகள் இயக்கப்படுகின்றன.

    எனவே அந்த சேவைகள் அல்லது அவற்றின் தரவுகள் இந்தியாவுக்கு மறுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே உள்நாட்டு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கவும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்கைக்கோளின் நீள் வட்டப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×