என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மழையின்போது வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டால் கதவுகளை திறக்க வேண்டாம்- போலீசார் எச்சரிக்கை
- மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது.
- காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.
காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. குளிர் மற்றும் மழை காரணமாக மக்கள் சீக்கிரம் தூங்கச் செல்கின்றனர். இதனை பயன்படுத்தி மர்மநபர்கள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
மழையின் போது வீடுகளுக்கு வெளியே குழந்தைகள் அழுவது, குழாயில் தண்ணீர் ஓடுவது போன்று வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டால் பொதுமக்கள், வீட்டு கதவுகளை திறக்க வேண்டாம்.
அக்கம் பக்கத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்து உஷாராக வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அது கொள்ளையர்களின் நவீன யுக்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.