search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாகன சோதனையில் பரபரப்பு: போலீஸ்காரரை கார் பேனட்டில் 400 மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிரைவர்...
    X

    வாகன சோதனையில் பரபரப்பு: போலீஸ்காரரை கார் பேனட்டில் 400 மீட்டர் தூரம் இழுத்து சென்ற டிரைவர்...

    • நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார்.
    • சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கதிர்காம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கவுதம் ஜோஷி மற்றும் போலீசார் அல்காபுரி பகுதியில் பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தவில்லை. மாறாக போலீஸ்காரர் கவுதம் ஜோஷி மீது மோதினார்.

    இதில் கார் பேனட்டில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரரை சுமார் 400 மீட்டர் தூரம் வரை கார் டிரைவர் இழுத்து சென்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றனர்.

    எனினும் அந்த கார் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் கவுதம் ஜோஷியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கவுதம் ஜோஷி கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் மீது மோதிய கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×