என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஐதராபாத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நூதன போஸ்டர்கள்
- ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
- ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.
திருப்பதி:
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
குறிப்பாக ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.
"இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் விஷ பட்ஜெட் பை பை மோடி" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் 2014-ல் முழுவதுமாக வளர்ந்த தலைமுடியும், 2023-ல் வழுக்கையுடைய நபரின் படங்களும் அதில் உள்ளன.
போதை பட்ஜெட்டுக்கு நன்றி மோடிஜி-தெலுங்கானா நடுத்தர வர்க்க மக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்கள் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.