என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் மீது அவதூறு- இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு
- சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பல்வேறு திரைப்படங்களை தயாரித்தார்.
- தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பல்வேறு திரைப்படங்களை தயாரித்தார். கடந்த தேர்தலுக்கு முன்பு ததாகா படத்தின் ப்ரோமோஷன் வெளியிடப்பட்டது.
அப்போது சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரின் ஆளுமைகளை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். மடிப்பாடு மண்டல செயலாளர் ராமலிங்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.